Home Jaffna News நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா? நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இம்முறை தேர்த்திருவிழா நடைபெறாதா? நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
540

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் போது வழமை போன்று இம்முறையும் தேர்த் திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் கந்தனின் வெளிவீதி உலா நடைபெறாது என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது போலியான தகவல்கள் எனவும் திட்டமிட்ட வகையில் தேர்த்திருவிழா நடைபெறும் என நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் சித்தத்தின் பிரகாரம், தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் நல்லூர் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவு செய்திகளை பார்த்து பக்தர்கள் குழப்பம் அடைய தேவையில்லை என நிர்வாகம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பமாகும். ஆகஸ்ட் 30ம் திகதி தேர் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!
Next articleயாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை!