நரம்பு பாதிப்பு என்று வரும் போது, முதலில் நமக்கு தெரிய வரும் அறிகுறி கைகள், விரல்கள், கால்கள் மற்றும் பாதங்கள் போன்றவை மரத்துப்போகும்.உணர்ச்சி நரம்புகள் தான் தகவல்களைப் பரிமாற காரணமாகும். இந்த நரம்புகள் பாதிக்கப்படும் போது, கைகள் அல்லது பாதங்கள் மரத்துப் போகும். இப்படி அடிக்கடி ஏற்பட்டால், அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.அப்படி சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அது அப்படியே உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, நிலைமையை தீவிரமாக்கிவிடும்.
நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், கூர்மையான வலி அல்லது எரிச்சலுடன் கூடிய வலியை அனுபவிக்கக்கூடும். இந்த வகையான வலியானது கைகள் அல்லது பாதங்களில் அனுபவிக்கக்கூடும். மற்ற வலிகளை விட, இந்த வகை வலி சற்று வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், வலியானது இரவு நேரத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும்.