அதிர வைக்கும் உண்மைகள்!மருந்திற்கும், மரணத்திற்கும் பயன்படும் குன்றிமணி!

0

இந்தத் தாவரத்தில் அறிவியல் பெயர் Abrus precatorius. உலகெங்கும் உள்ள வெப்ப மண்டல காடுகளில் இது காட்டுச் செடியாக வளர்ந்து நிற்கிறது. 10 அடி உயரம் வரை வளரும் இந்தச் சிரிய செடியில் அவரை போல காய் காய்க்கும். அதற்குள் இருந்து வெளிவரும் விதைதான் குன்றி மணி.

நம் ஊரில் காலம் காலமாக அளக்க குன்றி மணிதான் எடைக்கல். ஒரு குன்றி மணிக்கு இணையான அளவு கொண்ட தங்கமே குண்டுமணி தங்கம் என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இந்த குன்றி மணியின் அழகில் மயங்காதவர்கள் கிடையாது. முத்து பவளம் போல இந்த மணியை ஆபரணங்களில் பயன்படுத்தியவர்களும் உண்டு. ஐரோப்பாவில் இப்போது இந்த மணி rosary pea… அதாவது ஆபரண பட்டாணி என்றுதான் அழைக்கப்படுகிரது.

என்னதான் பட்டாணியோடு இதனை இணைத்துப் பேசினாலும் இதை சுண்டல் போல வேக வைத்து தின்ன முடியாது. காரணம் மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரம் இது. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றி மணி போதுமானது என்கிறார்கள். உலகம் முழுவதும் தாவரத்தில் இருந்து பெறப்படும் விஷத்தில் மூன்றாவது இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்த குன்றி மணியை கடிக்காமல் அப்படியே விழுங்கினால் ஜீரணமாகாமல் மலத்தில் வெளியேறிவிடும். விஷமும் நம்மைத் தாக்காது. கடித்து விழுங்கினால் அவ்வளவுதான். குன்றி மணியில் இவ்வளவு கொடிய விஷம் இருந்தாலும் இந்தத் தாவரம் முழுவதும் விஷம் கிடையாது.

குன்றிமணியின் வேர் நமது சித்த மருத்துவத்திலும் கூட மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் டீ போட்டுக் குடிக்கும் பழக்கமும் உலகம் முழுவதும் இருந்திருக்கிறது.

தோல்நோய்கள்: இலைகள், வேர் மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகளின் கசாயம் இருமல், சளி மற்றும் குடல்வலி போக்கும். இலையின் சாறுடன் எண்ணெய் கலந்து வலியுடனான வீக்கங்கள் மீது பூசப்படுகிறது. வெண்குஷ்டம், பித்தம், நமைச்சல், போன்ற தோல் வியாதிகளை நீக்க உதவும்.

நரம்பு கோளறுகளை குணமாக்கும்:
வேர் வலுவேற்றி, சிறுநீர்போக்கு, வாந்தி தூண்டுவது, வாய்குழறச்செய்வது, பால் உணர்வு தூண்டுவது, நரம்புக் கோளறுகளுக்கு மருந்தாகிறது. கருச்சிதைவு தோற்றுவிப்பது, விதைகளின் பசை மேல்பூச்சாக தோள்பட்டை வலி, தொடை நரம்பு வலி, மற்றும் பக்கவாதத்தில் பயன்படுகிறது.

முடி வளர குன்றிமணி:
“கையாந்தகரை சாறு நாலுபலம் எடுத்து

ரெண்டு பலம் குன்றிமணிப் பருப்பு கலந்தரைத்து

ஒரு பலம் எள் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி சீலை வடிகட்டி

தினம் பூசப்பா கிழவனுக்கு குமரன் போல் சடை காணும்”

என்பது சித்தர் பாடல். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து நல்லெண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். முடி நன்றாக செழித்து வளரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆரோக்கியம் என்று நினைத்து அதிகமாக சாப்பிடும் மீன் பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Next articleதேனிலவு முடிந்து ஊருக்கு வந்த உடனே புதுமாப்பிள்ளை தற்கொலை! மனைவி குறித்து எழுதியிருந்த பகீர் கடிதம்!