நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் போன்றே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுஜித்.. அப்படத்தின் இயக்குனர் கூறுவது என்ன?

0

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் இது குறித்து அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் நேற்று மாலை 5.30 மணியளவில் விழுந்துவிட்டான்.

குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் மீட்புக்குழுவினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டினர். குழந்தையை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரியும் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது.

அதனை மீட்க வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், போலீஸார், ஆட்சியர், மீட்புக் குழுவினர், ஊர்மக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சி வெளியாகி காண்போரை கலங்கச் செய்கிறது.

குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இப்போது நிஜத்தில் நடக்கும் இந்த கலங்க வைக்கும் சம்பவம் போன்ற கதையை கொண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் கடந்த 2017-ல் வந்தது.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை எப்படி எல்லோரும் சேர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்டனர் என்பதே அதன் கதையாகும்.

தற்போது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள நிலையில் இது குறித்து அறம் பட இயக்குனர் கோபி நயினார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் பு​​திய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை?

ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது.

ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும்

ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்மா இருக்கிறேன் கவலைப்படாதே! ஆழ்துளைக்குள் புதையுண்ட நிலையில் ம்ம்.. என்று சொன்ன குழந்தை? விடிய விடிய தொடரும் திக் திக் நிமிடங்கள் !
Next articleஎன்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்ருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம் !