நம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் !

0

தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய அவசரக் காலங்களிலும் கூட நாம் மூடநம்பிக்கையாக கருதும் ஒருசில நிகழ்வுகள் நடைமுறையில் உள்ளது.

காரணம் அறியப்படாத மூடநம்பிக்கை குறித்த அபசகுணங்களாக நினைக்கும் நிகழ்வுகளை இன்றும் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது வீட்டில் காலம் காலமாக அபசகுணமாக நினைக்கும் சில மூடநம்பிகைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

அபசகுணங்களாக நினைக்கும் மூடநம்பிக்கைகள்!

நமது வீட்டின் திறந்த ஜன்னல் வழியாக பறவை பறந்து போவதை போல காண்பது மரணத்தை வெளிப்படுத்தும் கெட்ட சகுனம் என்று கருதப்படுகிறது.

பூஜை அறையில் ஏற்றும் விளக்குகள் அணைந்தால், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது. என்ற மூடநம்பிக்கை நம் வீடுகளில் இன்றும் நம்பப்படுகிறது.

தேனீக்கள் கடவுளிடம் இருந்து செய்தி கொண்டு வருவதாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த தேனீக்கள் நம் வீட்டில் தங்கினால், வீட்டில் உள்ள யாருக்காவது மரணம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

நாம் ஒரு புதிய வீட்டிற்கு செல்லும் போது பழைய துடப்பத்தை எடுத்து செல்வதால், அது நமக்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.

நாம் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் மரணம் அல்லது தீய சம்பவங்கள் நடக்கும் என்று கருதப்படுகிறது.

கடிகாரம் கீழே விழுந்து உடைந்தாலும், தானாக கடிகாரம் ஓடுவது நின்றாலும் அது மரணத்தை வெளிப்படுத்தும் மணி ஓசை என்று கருதப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 29.6.2018 வெள்ளிக்கிழமை !
Next articleஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்!