தயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்! இல்லனா பிரச்சினைதான்!

0

பழங்கள் சாப்பிடுவது என்பது நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கான அவசியமான ஒன்றாகும். ஆனால் அனைத்து பழங்களையும் எல்லா நேரமும், எல்லாவற்றுடனும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சில பழங்களை தவறான பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது மரணத்தை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்றாகும். இப்பொழுது அது அதிகம் கிடைக்கும் பருவகாலம் வேறு, அதனால் அதனை அதிகம் சாப்பிட தொடங்கியிருப்பீர்கள். பலாப்பழம் சுவையும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதை சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

புற்றுநோய்
பலாப்பழத்தில் அதிகளவு ஆலசிஜனேற்றிகளும், பைட்டோநியூட்ரியன்ட்களும் உள்ளது, மேலும் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இதனால் இது பல புற்றுநோய்களை தடுக்கக்கூடியது குறிப்பாக நுரையீலை புற்றுநோய், மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் போன்றவற்றை இது தடுக்கக்கூடும். இது சேதமடைந்த செல்களை சரிசெய்யக்கூடும்.

எடை குறைப்பு
எடை அதிகரிப்பி இப்போதிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். பலாப்பழம் எடை குறைப்பிற்கு உதவக்கூடும் ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவு, மேலும் கலோரிகளும் குறைவுதான். எனவே இதை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள்தான் அதிகம் கிடைக்குமே தவிர எடை அதிகரிக்காது.

தூக்க பிரச்சினைகள்
தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் பலாப்பழம் தீர்த்து வைக்கக்கூடும். இதில் இருக்கும் அதிகளவு இரும்புச்சத்தும், மெக்னீசியமும் உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். மேலும் இது இன்சோம்னியா ஏற்பட காரணமாக இருக்கும் அனிமியா ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமான கோளாறுகள்
பலாப்பழம் தொடர்ந்து சாப்பிடுவது உங்களுடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கும். அதற்கு காரணம் இதிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்துக்கள் ஆகும். 100 கிராம் பலாப்பழத்தில் 3.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுவலி வரும் என்ற அச்சமே உங்களுக்கு தேவையில்லை. மேலும் இது பெருங்குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலையையும் செய்கிறது.

பலாப்பழமும், தயிரும்
பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இரண்டும் தனித்தனியாக இருக்கும்போது ஆரோக்கியமான பொருட்கள்தான் ஆனால் அவற்றை ஒன்றாக சாப்பிடும்போது அதனால் ஆபத்துகள் மட்டுமே ஏற்படும். நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே பலாப்பழத்தையும், தயிரையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆயுர்வேதத்தில் இது மிகவும் ஆபத்தான உணவு சேர்க்கையாக கருதப்படுகிறது.

ஆபத்துகள்
ஆயுர்வேதத்தில் கூறியுள்ளபடி பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து சில பிரச்சினைகளை உண்டாக்கும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் குறிப்பாக வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனால் மேலும் சில சரும பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிவியல் உண்மைகள்
ஆயுர்வேதத்தின் படி இவை இரண்டும் ஆபத்தான உணவாக இருந்தாலும் விஞ்ஞானரீதியாக பார்க்கும் போது அவை ஆரோக்கியமான பொருளாகவே கருதப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தயிரில் பலாப்பழம் சேர்ப்பது அதன் தரத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் சரியான அளவில் கலந்து சாப்பிடுவது உங்களுக்கு இருமடங்கு பலனை தரும். ஆனால் தவறான அளவில் சாப்பிடுவது பிரச்சினையைத்தான் உண்டாக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா! தெரிஞ்சிக்கங்க!
Next articleஇந்த பழத்தை சாப்பிட்ருக்கீங்களா! இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க ஏன் தெரியுமா!