Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal நடுரோட்டில் வைத்து பிரம்படி கொடுத்த மலேசிய அரசு!ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்!

நடுரோட்டில் வைத்து பிரம்படி கொடுத்த மலேசிய அரசு!ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்!

0
464

காரில் பாலியல் உறவு மேற்கொள்ள முயற்சித்த மலேசிய பெண்களுக்கு கிடைத்த பிரம்படி தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மலேசியா, கடுமையான மத ரீதியான கட்டுபாடுகளை கொண்டது.

இந்நிலையில், மலேசிய நாட்டின் திரங்கானு மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 மற்றும் 32 வயதான பெண் தோழிகள் இருவர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது, பொதுவெளியில் காரில் ஓரினச் சேர்க்கையில் (லெஸ்பியன்) ஈடுபட முயற்சித்தனர்.

இதை கண்ட காவல்துறையினர், அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஷரியா நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இந்த பெண்களுக்கு 800 டாலர் அபராதம் மற்றும் 6 பிரம்படிகளை தண்டனையாக வழங்கி உத்தரவிட்டது.

இந்த தண்டனையானது இந்த இரு பெண்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன ஒப்புதலுடன் உறவு வைத்திருக்கும் இரு நபர்களை தண்டிக்க எந்த சட்டத்துக்கும் உரிமை இல்லை என உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இச் சம்பவத்தை கண்டித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்துக்கு பிரம்படி அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டம் உள்ளது.

Previous articleஅபிராமியின் பகீர் வாக்குமூலம்! குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றேன்! கணவர் தப்பிவிட்டார்!
Next articleஇரண்டு நாட்கள் வெறியாட்டம்!இளமை தூங்கவிடவில்லை! குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தாயின் பகீர் வாக்குமூலம்