பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது.
பேய் பிசாசு இருக்கிறது என்பதற்கான கதைகளும், கட்டுக்கதைகளும் இருக்கவே செய்கிறது. எனினும், பேய் என்று சொன்னதும் எல்லோரும் அஞ்சுவது மட்டும் உண்மை.
சில இளைஞர்கள் பேய் போல வேடம் போட்டு வீதியில் செல்லுபவர்களை பயமுறுத்தி உள்ளனர். இந்த காட்சி சமூகவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. இது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.




