நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தில் சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஒளிப்படம் இணையத்தில் வைரலாகிவருகின்றது.
சாய் பல்லவி மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற முதல் படத்தில் அறிமுகமான மலர் டீச்சர் கதாபாத்திரத்தினூடாக பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது தமிழ், தெலுங்கு மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சாய் பல்லவி அவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவி நடித்த “தாம்தூம்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத்துடன் இருக்கும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.


By: Tamilpiththan