நகைகளுக்காக மட்டும் மேகன் மெர்க்கல் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா!

0

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நகைகளுக்காக மட்டும் மேகன் மெர்க்கல் சுமார் 600,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி அமெரிக்க நடிகை என்பதால ஆடை அலங்காரங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருவது தொடர்பில் முன்னரே பல தகவல்களும் வெளியானது.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மேகன் மெர்க்கல் நகைகளுக்காக மட்டும் சுமார் 600,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில், குட்டி இளவரசர் ஆர்ச்சி பிறந்த பின்னர், மேகன் மெர்க்கல் முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

ஆனால் அதன்பின்னர் அவரது விரலில் உள்ள மோதிரம் தொடர்பாகவே பொதுமக்களின் பேச்சு இருந்தது.

இளவரசர் ஹரி தமது முதல் திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு மேகன் மெர்க்கலுக்கு வழங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

அது சுமார் 4,350 பவுண்டுகள் அளவுக்கு விலை இருக்கலாம் எனவும், பிரித்தானிய ராணியாரின் பிரத்யேக நகை வடிவமைப்பாளரே அந்த மோதிரத்தையும் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகன் மெர்க்கலிடம் மொத்தமாக 91 எண்ணிக்கையிலான நகைகள் இருப்பதாகவும், அதன் மொத்த மதிப்பு 600,000 பவுண்டுகள் எனவும் கூறப்படுகிறது.

இதில் ஏழு கழுத்தணிகள், 23 வளையல்கள், 26 மோதிரங்கள் மற்றும் 35 ஜோடி காதணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

இளவரசர் வில்லியத்தின் மனைவியான கேட் மிடில்டனிடம் 60 எண்ணிக்கையிலான நகைகளே உள்ளன.

அதன் மொத்த மதிப்பு சுமார் 300,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது. மேகனிடம் இருக்கும் பெருவாரியான நகைகள் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்தியவையாகும்.

மேலும், மேகனிடம் உள்ள மிகவும் விலை உயர்ந்த மோதிரங்களில் ஒன்று, திருமண நாள் நிகழ்ச்சியின்போது அவர் அணிந்திருந்த aquamarine மோதிரமே. இதன் மதிப்பு 75,000 பவுண்டுகள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர்! தற்போதைய நிலை என்ன தெரியுமா!
Next articleகைதிகள் பாலியல் உறவு வைத்துக் கொள்ள தனி அறை! சுவிஸ் நிர்வாகம் ஒப்புதல்!