தோழியின் மகளை கர்ப்பமாக்கிய கொடூரனுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய தண்டனை!

0

அமெரிக்காவில் 10 வயது சிறுமியை கர்ப்பாக்கிய கொடூரனுக்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் Marion பகுதியைச் சேர்ந்த Nicholas Deon Thrash என்ற நபரே இந்த செயலை செய்துள்ளார்.

அதாவது Nicholas Deon Thrash-க்கு பெண் தோழி ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு தற்போது 12 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

இவரின் மகளை Nicholas Deon Thrash 8 வயதிலிருந்து 10 வயது வரை சுமார் 15 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் அந்த கர்ப்பத்தை கலைப்பதற்கு அருகில் இருக்கும் கிளினிக் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தையை அவரது தாய் தத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. அப்போது Nicholas Deon Thrash தான் சிறுமியை கர்ப்பமாக்கவில்லை எனவும், அவர் தாய் தான் ஏதோ நாடமாடுகிறார் என்று தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

அவரின் அம்மாவோ, அந்த சிறுமியிடம் பள்ளியில் இருக்கும் யாராது ஒருவர் தான் காரணம் என்று கூறும் படி வற்புறுத்தியுள்ளார்.

அதன் பின் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் சிறுமி நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி கையில் ஒரு பொம்மையுடன் பரிதாபமாக வந்துள்ளார். நடந்தவற்றை கூற, உடனடியா நீதிமன்றத்தில் Nicholas Deon கத்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி அறிவித்துள்ளார். அப்போது Nicholas Deon Thrash-க்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் மகளின் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்ததற்கும், ஏன் மகளை அப்படி கூறச் சொன்னார் என்பது குறித்து தாயின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதந்தையும் மகளும் பரிதாபமாக பலி!
Next articleசடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளர் 3 மாத கர்ப்பிணி! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!