பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது.1. இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.2 . அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.