தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் நின்ற மேகன்! கோபமடைந்த ஹரி!

0
332

தேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை இளவரசர் சரி செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவில் கடந்த வாரம் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.

பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் நின்று கொண்டிருந்த அவர்கள் அனைவரும் பொதுமக்களின் ஆரவாரத்தை பெற்றுக்கொண்டிருந்தனர்.

அந்த சமயம் தேசிய கீதம் ஒலிப்பதற்கு ஆயத்தமானது. அப்போது பின் பக்கமாக நின்றுகொண்டிருந்த ஹரியை பார்த்து மேகன் ஏதோ கேட்க, அதற்கு ஹரி பதிலளிக்கிறார்.

இரண்டாவது முறையாக மேகன் திரும்பிய பொழுது ஹரி சரியாக பதில் கொடுக்கவில்லை. அதேசமயம் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டுவிட்டது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, உதடு அசைவு நிபுணர்கள் வார்த்தைகளை கணித்துள்ளார்.

அதில் மேகன் முதல் தடவை திரும்பிய போது ஹரி, “ஆமாம், அது சரி” என பதில் கொடுக்கிறார். தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருந்த போது மீண்டும் திரும்பிய மேகனிடம், “திரும்பி முன்பக்கத்தை பார்” என கூறியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சி குறித்து தற்போது இணையதளவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபிக்பாஸ் வர ஒரு நாளுக்கு 25 லட்சம் சம்பளம் கேட்ட பிரபல நடிகர்! அதிர்ந்த குழு!
Next articleஅரங்கத்தை தெறிக்க விட்ட லண்டன் வாழ் ஈழத்து குயில்! வியப்பில் உறைந்த நடுவர்கள்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கை ரசிகர்கள்!