தெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச்! இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது!

0

நேற்று ‘பேட்ட’ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனவைருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தது மட்டுமின்றி, மிக எளிமையாக பெரும் வாழ்க்கை தத்துவத்தை, வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி சென்றார். அவரது அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச் எக்ஸ்ட்ரா கைத்தட்டல், விசில்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. ரஜினி எளிமையாக கூறிய அந்த எக்ஸ்ட்ரா ஸ்பீச்சில் நிறைய அர்த்தங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. வாங்க அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச்ச கொஞ்சம் அலசுவோம்.

எக்ஸ்ட்ரா – சாப்பாடு!
அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோய் அபாயம், நீரிழிவு / சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு அளவு அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம். இதுமட்டுமின்றி, உடல் பருமன் அதிகரிப்பதால் கருவள குறைபாடும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, எக்ஸ்ட்ரா – சாப்பிடுவதை குறைத்துவிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எக்ஸ்ட்ரா – உறக்கம்!
ஒரு மனிதனுக்கு தேவையான உறக்கம் ஆறில் இருந்து எட்டு மணி நேரம். ஆனால், இதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். இராத்திரி 2 மணி வரை PUBG விளையாடிவிட்டு, மூன்று மணியில் இருந்து ஒன்பது / பத்து மணிவரை உறங்குவது மிகவும் தவறு. 9 மணியில் இருந்து 5/6 ஆறு மணி வரை உறங்குவது ஆரோக்கியமானது. அதிகாலை சூரிய ஒளியில் வாக்கிங், ஜாக்கிங், யோகா செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

எக்ஸ்ட்ரா – திங்கிங்!
நல்ல எண்ணம் இருத்தல் வேண்டும். அது நல்ல வாழ்க்கை நடத்த நிச்சயம் உதவும். ஆனால், கண்டதை எல்லாம் கண்ட நேரத்தில் யோசித்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம், மன பதட்டம், மன சோர்வு தான் அதிகரிக்கும். இதனால், உங்கள் செயற்திறன் பாதிக்கப்படும், வேலை கெடும், மனநிலை சீர்கெடும். மனநிலை ஆரோக்கியமற்று போனால், தன்னால் உடல் நிலையும் ஆரோக்கியமற்று போகும். எனவே, அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, ஓவர் திங்கிங் மனதிற்கு நஞ்சு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

எக்ஸ்ட்ரா – பிரஷர்!
நீங்கள் ஒரு மல்டி- டேலண்டட் பர்சனாலிட்டியாக இருக்கலாம். உங்களது டீம் லீட், மேனேஜர், எச்.ஆர். நீங்கள் ஒரு ஹார்ட் வரக்கர், வர்கஹாலிக் என்று பிறர் முன் உங்களை பெருமையாக பேசலாம். ஆனால், ஹார்ட் வர்க் அல்லது ஓவர் வர்க் செய்வது என்ன பெருமையா? கொடுக்கும் சம்பளத்திற்கு கூடுதலாக யார் வேலை செய்தாலும் அவர்களை பாராட்ட தான் செய்வார்கள். அதற்கு நீங்கள் சீனியர் சாப்ட்வேட் என்ஜினியராக இருக்க வேண்டும் என்பதில்லை, கூலிக்கு வேலை செய்யும் ஆளாக இருந்தாலும், சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்தால் பாராட்டுக் கிடைக்கும். ஆனால், நமது உறவுகளுடனான பாசம், பரிவு, நெருக்கம் குறைந்துவிடும். இதனால், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் குறையும், நிறைய சின்ன, சின்ன சந்தோசங்களை இழந்து, மன அழுத்தம் மட்டுமே மிஞ்சி இருப்பீர்கள்.

எக்ஸ்ட்ரா – சோம்பேறித்தனம்!
எக்ஸ்ட்ரா உறக்கம் எப்படி கெட்டதோ, அதே போல தான் எக்ஸ்ட்ரா சோம்பேறித்தனமும். இந்த எக்ஸ்ட்ரா சோம்பேறித்தனம் நிச்சயம் உங்களை எக்ஸ்ட்ரா உறங்கவும் செய்யும். மேலும், உங்கள் செயற்திறன் மற்றும் கற்பனை திறனையும் அழிக்கும். ஒருக் கட்டத்தில் இந்த சமூகத்தில் / குடும்பத்தில் நீங்கள் ஒரு தேவை இல்லாத, செல்வாக்கு இல்லாத ஆளாக மாறி நிற்க இந்த சோம்பேறித்தனம் வழிவகுக்கும்.

எக்ஸ்ட்ரா – அட்வைஸ்!
அட்வைஸ் என்பது மருந்தினை போல, அது யாருக்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் அளிக்க வேண்டும். அவசியமில்லாதவர்களுக்கு அல்லது அளவுக்கு மீறிய டோஸ் கொடுத்தால் அந்த மருந்து விஷமாகிவிடும். அந்த மருந்தினை கொடுத்த டாக்டருக்கு தான் கெட்ட பெயர் மிஞ்சும். எனவே, அட்வைஸ் கொடுங்கள். எக்ஸ்ட்ரா – அட்வைஸ் கொடுக்காதிங்க.

எக்ஸ்ட்ரா – பேச்சு!
பேச்சுத்திறன் ஒரு அபரிமிதமான திறன், ஆற்றல். ஆனால், அதை உகந்த, தகுந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும். அறிவார்ந்த விஷயமாகவே இருந்தாலுமே கூட அளவுக்கு மீறி பேசினால், அது திகட்டிவிடுமே தவிர, கேட்பவர் மனதில் நிலைக்காது. எனவே, பேசுங்க, எக்ஸ்ட்ரா பேசி பிளேடு போடுறான் அந்தாளு என்கிற அவப்பெயருக்கு ஆளாகாதிங்க.

எக்ஸ்ட்ரா – உடற்பயிற்சி!
எக்ஸ்ட்ரா சோம்பேறித்தனம் மட்டுமில்லைங்க எக்ஸ்ட்ரா உடற்பயிற்சி பண்றதும் தப்பு தான். நீங்க சாப்பிடுற கலோரிகள் கரைக்கிற அளவுக்கு தான் உடல் வேலை செய்யணும். அதுக்கு மேல வேலைப் பண்ணிக்கிட்டே இருந்தா எனர்ஜி கம்மி ஆயிடும். தசை வலிமையில தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு சமனிலையில எடுத்துக்குங்க.

எக்ஸ்ட்ரா – நல்லது!
நம்ம ஊருல எக்ஸ்ட்ராவா நல்லது பண்ணா கூட இவன் பில்டப் பண்றான். தான் இவ்வளோ நல்லது பண்றேன்னு காமிச்சிக்க சீன் போடுறான்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்கள் நல்லது பண்றத ஊருக்கு தெரியாம பண்ணாதிங்க… அப்பறம் ஸ்டிக்கர் ஓட்டுனவன் எல்லாம் நல்ல பேரு வாங்கிடுவான். உதவி பண்ண உங்கள ஊர் மறந்திடும். கொஞ்சம் ஊருக்கு தெரியிற மாதிரி நல்லது பண்ணுங்க, கொஞ்சம் தெரியாத மாதிரி பண்ணுங்க. வாழ்க்கை சிறப்பா இருக்கும்.

எக்ஸ்ட்ரா – காதல்!
காதல் கடல் போன்றது, அத ஏன்பா கம்மியா பண்ண சொல்றன்னு கேட்கிறீங்களா? நீங்கள் எவ்வளவு வேணும்னா காதலிங்க. ஆனா, அதே அளவு காதல எதிர்பார்க்காதீங்க. எதிர்பார்ப்பு எவ்வளவு அதிகமாகுதோ, அவ்வளோ ஏமாற்றம் தான் நமக்கு மிஞ்சும். அவங்க ஏதோ கோபத்துல, சூழ்நிலை காரனத்தால கூட ஏதாவது பேசி இருக்கலாம், செயல் பட்டிருக்கலாம். ஆனால், நமக்கு அது அளவுக்கு மிகுதியான காயத்த உண்டாக்கும். எனவே, எக்ஸ்ட்ரா – எதிர்பார்ப்பு எதுலையும் வேண்டாம், தவிர்த்திடுங்க.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு!
Next articleவெயில் சருமத்தை காக்கும் கிர்ணி பழ பேஸ்பேக்!