Home thatstamil one india tamil oneindia tamil vilayattu seithigal தெறிக்கவிட்ட கிறிஸ் கெய்ல்! மற்றுமொரு உலக சாதனை!

தெறிக்கவிட்ட கிறிஸ் கெய்ல்! மற்றுமொரு உலக சாதனை!

0
1038

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசி மேற்கிந்திய தீவுகள் அணியின் கெய்ல் உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சிக்சர் மழை பொழிந்தார்.

தொடக்கத்தில் நிதானமாக ஆடிய அவர் போக போக உள்ளூர் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.

ஒரு சிக்சர் 121 மீற்றர் தூரத்திற்கு பறந்தது. மற்றொரு முறை பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது. 35 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 3 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அப்போது 39 வயதான கிறிஸ் கெய்ல் 100 ஓட்டங்களுடன் (100 பந்து, 3 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தார். இது அவருக்கு 24-வது சதமாகும்.

மேலும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (20 ஓவர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட்) அதிக சிக்சர் விளாசியவர் என்ற சாதனையையும் கெய்ல் படைத்தார்.

முதல் சிக்சர் அடித்த போது, இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் அப்ரிடியை (476 சிக்சர்) அவர் முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி! இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்! 10 நிமிட உற்சாக கதை!
Next articleபெற்ற குழந்தைகளை துடிக்க துடிக்க கழுத்தை நெரித்துக் கொலை செய்து ஒப்பாரி வைத்த தாய்! அதிர்ச்சியில் உறவினர்கள்!