இரவில் நன்கு தூங்காமல் இருந்தால், மிகுந்த சோர்வை உணரக்கூடும். அதுமட்டுமின்றி மன இறுக்கம், மனப் பதட்டம், ஆற்றல் குறைவு மற்றும் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே என்ன தான் வேலை இருந்தாலும், நல்ல தூக்கத்தைப் பெற ஒவ்வொருவரும் முயல வேண்டும்.
இரவில் தூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரை எடுப்பவரா? முதலில் அந்த வழியைக் கைவிடுங்கள். அதற்கு சிறந்த மாற்று வழி ஒன்று உள்ளது. அது தான் வாழைப்பழ டீ. இந்த டீ குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வாழைப்பழம் எப்படி உதவும்!
வாழைப்பழம் நல்ல தூக்கத்தைப் பெற உதவுவதோடு, அதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இச்சத்துக்கள் தான் தூக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்
இச்சத்துக்கள் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் அளவைக் குறைக்கும்.
பட்டை எப்படி உதவும்
பட்டை உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கும்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
வாழைப்பழம் – 1
பட்டைத் தூள் – 1 சிட்டிகை
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வாழைப்பழத்தின் முனைகளை நீக்கிவிட்டு, தோலுடன் சேர்த்து 8-9 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டி, அதில் பட்டைத் தூளை சேர்த்து கலந்து, தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
தூக்கம்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் இந்த டீயைக் குடித்து வந்தால் தூக்கப் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.




