துபாய் லாட்டரியில் இந்தியருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! எத்தனை கோடி தெரியுமா?

0
932

துபாயில் தனது மகனின் பிறந்த நாளை வைத்து லாட்டரி வாங்கிய தந்தைக்கு ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளதால், அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில் வர்கீஸ் தெவரில்(50). இவர் துபாயிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 20-ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் கேரளாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனில் சமீபத்தில் அபுதாபியில் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

அதில் அவர் தனது மகனின் பிறந்த நாளான 11/97 என்பதால் அந்த நம்பருடைய அதாவது 11197 என்ற எண்ணுடைய நம்பரை வாங்கியுள்ளார்.

இதையடுத்து தற்போது ஜாக்பாட் பரிசிற்கான் நம்பர் அறிவிக்கப்பட்ட போது, அந்த நம்பர் அனில் வாங்கிய நம்பர் என்பதால் அவருக்கு மெக ஜாக்பாட் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள்(அதாவது இலங்கை மதிப்பு 30 கோடி) கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய மகன் தான் என்னுடைய அதிர்ஷ்டம். நான் ஆன்லைனில் டிக்கெட் வாங்கினேன். அப்போது என் மகனுடைய பிறந்த எண்ணை வைத்து வாங்கினேன்.

நான் இதில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, எனக்கு சமீபத்தில் தான் பல பிரச்சனைகள் எழுந்தது.

அது எல்லாம் தற்போது முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பரிசுத்தொகையை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்கவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

Previous articleமனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எறித்த கணவன்…..எதற்கு தெரியுமா..!
Next articleஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!