அமெரிக்கா மாசச்சுசெட்ஸ் மாகாணத்தில் கோல்ஃப் பந்துகளை திருடும் நரியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஸ்ப்ரிங்ஃபீல்டு கண்ட்ரி க்ளப்பின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், மைதானத்தில் நடைப்பெற்று வரும் கோல்ஃப் ஆட்டத்தை தொலைவில் இருந்து இரண்டு நரிகள் காண்கின்றன. பந்து அருகே வந்தவுடன், ஒரு நரி ஓடிச்சென்று பந்தை திருடி ஒளித்து வைத்து கொள்கிறது.
தொடர்ந்து சில நாட்களாக இது போன்ற சம்பவம் நடைப்பெற்று வருவதாக கோல்ஃப் க்ளப்பில் விளையாடும் டவுனி என்ற கோல்ஃப் ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
கோல்ஃப் பந்தை நரி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.




