முதியவர் ஒருவர் அஜித் பற்றி பேசிய வீடுயோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தீபாவளி ரிலீஸ் என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள், பரவாயில்லை. இந்த பொங்கல் தல பொங்கல் என்று அஜித் ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டுள்ளனர்.
இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஈஸ்வரி ராவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. அப்பா, மகன் என்று அஜித் இரண்டு வேடங்களில் வருகிறார் என்பதை தவிர எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் முதியவர் ஒருவர் அஜித் பெருமை பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, வீடும் கட்டிக் கொடுத்த தெய்வம் அஜித் என்கிறார் அந்த முதியவர்.
மேலும் விவேகம் படத்தில் வரும் வர்றேன்மா என்ற வசனத்தை பேசி அஜித் ஸ்டைலில் துப்பாக்கியால் சுடுவது போன்று நடித்தும் காட்டியுள்ளார் அவர். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
True #thala ???????? pic.twitter.com/X9QPj4g0DB
— Rk suresh (@studio9_suresh) September 7, 2018