Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பபட்ட ஐபிஎல் மேட்ச்! மணமக்களை பார்க்காமல் விருந்தினர்கள் செய்த செயல்!

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பபட்ட ஐபிஎல் மேட்ச்! மணமக்களை பார்க்காமல் விருந்தினர்கள் செய்த செயல்!

0
854

திருமண வரவேற்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டியால், மணமக்களை பார்க்காமல், உறவினர்கள் ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை நான்காம் முறையாக வென்றது.

இந்ந்லையில், தற்போது ஒரு வீடியோ அதிகளவில் வைரலாகி வருகிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 12ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், ஐபிஎல் பைனல் என்பதால், பலர் இந்நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என எண்ணிய திருமண வீட்டார், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலேயே பெரிய திரையில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.

அதுவே அவர்களுக்கு எதிராக அமைந்தது. வந்தவர்கள், மணமக்களை பார்க்காமல், கிரிக்கெட் போட்டியையே பார்த்து கொண்டிருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக நடனமாடியும் குட்டிக்கரணம் போட்டும் கொண்டாடினர்.

பலர், பெரிய திரையின் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் கடைசிவரை யாரும் மணமக்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இந்த வீடியோவின் ஹைலைட்.

டுவிட்டரில் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Previous articleஎவரெஸ்டில் 23 முறை ஏறி உலக சாதனை!
Next articleதிருமண விழாவிற்கு ஹெலிகாப்டரில் வந்த மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பதறி அடித்து ஓடிய உறவினர்களின் வீடியோ!