திருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்!

0
518

திருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு 1500 ரூபாய் தண்டப் பணம் செலுத்துமாறும், அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் 3 மாதம் சிறைதண்டனை விதிக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்திவெளி – மொரக்கொட்டாஞ்சேனை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியிலிருந்து தொழில் ரீதியாக திருகோணமலை பகுதிக்குச் சென்று 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் அழைத்து சோதனை மேற்கொண்ட போதே 100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleபிரதேச சபை ஊழியர் காட்டு யானை தாக்கி படுகாயம்!
Next articleஐரோப்பிய நாடொன்றில் இருந்து புகலிடம் கோரிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்!