காலையில் செய்யும் ஒரு சில விடயங்கள் தான் நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்து கொள்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை நேரத்தில் நாம் செய்ய கூடிய சில அன்றாட செயல்கள் நம்மை முழுவதுமாக மாற்ற கூடிய தன்மை வாய்ந்தவை. அதுவும் இந்த பழக்க வழங்கங்கள் அனைத்துமே உங்களின் முகத்தை பளபளவென மாற்ற கூடியவையாம்.
இவற்றை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் ஏராளம். சரி, வாங்க அவை என்னென்ன செயல்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
முதல் வேளை..!
காலையில் எழுந்தததும் மொபைல் எங்குள்ளது என தேடாமல், 1 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள்.
உங்களின் நாளை இப்படி தொடங்கினால் மனதிற்கும் உடலிற்கும் அதிக ஆற்றல் கிடைக்கும். சீனர்கள் கூட இந்த பழக்கத்தை கடைபிடிப்பதால் தான் இவ்வளவு ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
வைட்டமின் பி
தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லி போன்றவற்றை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அத்துடன் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் கூடும்.
மசாஜ்
தினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் விரைவிலே கிடைக்கும்.
தேனும் இந்த நீரும்..!
முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதற்கு 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் போதுமானது. இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்களின் முகம் அழகாகும். அத்துடன் உடலில் உள்ள அழுக்குகளும் வெளியேறும்.