உள்ளங்கை உள்ளங்கால்களில் வியர்த்து கொட்டுதா? அருவருப்பா இருக்கா? அத போக்க இத செய்ங்க!

0

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் வியர்ப்பதற்கு மூன்று விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று, பிறப்பிலேயே ஒருவரின் உடல் அமைப்பு அப்படி அமைந்திருக்கலாம். இரண்டாவது, ‘ஹைபர் தைராய்டு’ எனப்படும் தைராய்டு அதிகமாகச் சுரந்தாலும் உள்ளங்கையும் உள்ளங்காலும் எந்த நேரமும் வியர்க்கும்.

மூன்றாவது, அளவுக்கு அதிகமான கவலை (Anxiety). குறிப்பாக, தேர்வு சமயத்தில் சிலருக்கு அதீதக் கவலை மற்றும் பதட்டத்தால் அளவுக்கு அதிகமாக வியர்த்து, தேர்வு எழுதும் பேப்பரே ஈரமாகிவிடும். மற்றவர்களுடன் கை குலுக்கக்கூட முடியாது. இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. இயல்பாகவே இதுபோன்ற உடல் அமைப்புகொண்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இந்த மருந்துகளைத் தடவிக்கொண்டு படுக்கலாம்.

இல்லாவிடில் கத்தரிக்காயை சமைப்பதற்கு அதை வெட்டி தண்ணீரிலே போட்டுவைப்பார்களல்லவா? அந்த தண்ணீரில் கைகளைமட்டும் நனைத்தாள் வியர்வை கட்டுப்படும் இம்முறையை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்ததாக ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

காலையில் எழுந்ததும் கை, கால்களை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். இந்த மருந்துகள் ஓரளவு மட்டுமே நிவாரணம் தரும். இவற்றைப் பயன்படுத்தியும் வியர்வை கட்டுப்படாவிட்டால், ‘அயன்டோபோரேசிஸ்’ (Iontophoresis) என்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி வியர்வைத் துளைகளை அடைப்பதுதான் இந்தச் சிகிச்சை. மொத்தம் 40 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சையைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் ஓரளவு வியர்வை குறைய ஆரம்பித்ததும், வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்தச் சிகிச்சை எடுக்க முடியாதவர்களுக்கு ‘போடோக்ஸ்’ (Botox) என்ற மருந்து உள்ளது. இதை ஊசி மூலம் கையில் செலுத்த வேண்டும்.

ஒரு முறை இந்த ஊசி போட்டால் சுமார் ஆறு மாதம் வரை வியர்வைத் தொந்தரவு இருக்காது. ஆனால், இதற்கான செலவு சற்று அதிகம். தைராய்டு, பதட்டம் மற்றும் கவலையால் இந்தத் தொந்தரவுக்கு ஆளானவர்கள், முதலில் இந்தப் பாதிப்புகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே, பிரச்னையைச் சரி செய்து விடலாம்.

Previous articleமூல நோயில் இருந்து விரைவில் விடுபட கற்றாழையை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா!
Next articleபுற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் வராமல் இருக்க இந்த சூப்பை ஒரு கப் குடிங்க!