தினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிட்டாலே நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்! காரணம் தெரியுமா?

0

இந்த பூமியில் உயிர் வாழ கூடிய எல்லாவித உயிரினங்களுக்கும் மிக அவசியமானது மூச்சு காற்று தான். காற்று இல்லையெனில் அணுவும் அசையாது. இந்த அண்டத்தின் முக்கிய மூல பொருளே காற்று தான். ஆனால், இதன் தன்மை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. சுவாசிக்கும் காற்று மாசுபட்டால் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் தான்.

இன்றைய சூழலில் ஏராளமானோருக்கு சுவாச கோளாறுகள் உள்ளன. இதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் இருக்கும் உங்களுக்கு தான் இந்த பதிவு. காரணம், சுவாசம் நின்ற பின் இந்த உடலை மட்டும் வைத்து கொண்டு நம்மால் எதையும் செய்ய இயலாது. இப்படிபட்ட பாதிப்பில் இருந்து உங்களின் நுரையீரலை பாதுக்காக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது நுரையீரலில் சேர கூடிய நச்சுக்களை வெளியேற்றும் உணவுகள் தான். நுரையீரலை பாதிப்பில் இருந்து காக்க தினமும் இந்த பதிவில் கூறும் 9 உணவுகளில் குறைந்த பட்சம் ஒன்றையாவது சாப்பிட்டால் போதும்!

ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலத்தை கூடாரமாக கொண்டுள்ள உணவு தான் மீன். வாரத்திற்கு 2 முறை உணவில் மீனை சேர்த்து உண்டால் நுரையீரலில் கோளாறுகள் உண்டாகாது. மேலும், நுரையீரலில் ஏற்பட கூடிய வீக்கத்தையும் இது தடுத்து விடும்.

நாம் நினைப்பதை விட தக்காளியில் பல்வேறு மருத்துவ பயன்கள் உண்டு. அதில் ஒன்று தான் நுரையீரல் பிரச்சினைகளை தடுப்பது. தொடர்ந்து தக்காளி ஜுஸ் அல்லது உணவில் சீரான அளவில் தக்காளியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படாதாம்.

புளிப்பு சுவை பலருக்கு பிடிக்காது தான். என்றாலும் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட சிட்ரஸ் வகை பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ஆதலால் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். மேலும், தினமும் 100 மில்லிகிராம் அளவிற்கு வைட்டமின் சி நிறைந்த இந்த உணவுங்களை சாப்பிட்டால் நுரையீரல் பாதிப்பு, இதில் சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்து விடும்.

சமையலுக்கு மற்ற எண்ணெய்களை விட ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த ஒன்றாகும். இதனை சமையலுக்கு பயன்படுத்தினால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் நுரையீரல் பாதிப்பில் இருந்தும் காக்கும்.

மற்ற பருப்புகளை காட்டிலும் வால்நட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன என ஆய்வுகள் சொல்கின்றன. காரணம் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான். உடலுக்கு முக்கியமாக தேவைப்படுகின்ற கொழுப்பு அமிலம் இது. தினமும் கொஞ்சம் வால்நட்ஸ் சாப்பிட்டால் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாதாம்.

நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ளவும், எல்லாவித பாதிப்பில் இருந்தும் காக்கவும் கிரீன் டீ உங்களுக்கு உதவும். இதிலுள்ள பாலிபீனல்ஸ் நுரையீரல் தசைகளை வீக்கம் அடையாமல் பார்த்து கொள்ளும். இதனால் சுவாச கோளாறுகள் உண்டாகாது.

பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடிக்கும் காபி நல்லதல்ல. ஆனால், வெறும் காபி பொடியை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் காபியை பிளாக் காபி என்பார்கள் இது தான் நுரையீரல் பிரச்சினைக்கு தீர்வை தருகிறது.

கீரைகளை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அதாவது, பச்சை கீரைகளை உணவில் வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிடுவோருக்கு எந்தவித நுரையீரல் பாதிப்பும் ஏற்படாதாம்.

நுரையீரலுக்கு உண்டாகும் பாதிப்புகளை தடுக்க ஆளி விதைகள் உதவும். இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 முதலிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அன்றாடம் அளி விதைகளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சினைகள் உண்டாகாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதலிரவில், நீங்கள் இதை செய்யவே கூடாதாம்! மீறினால் ஆப்பு தான்!
Next articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு !