தார தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

0

சில ஆண்களுக்கு ஜாதக ரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழை மரத்தை வெட்டும் பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வர். வாழையை தாரமாகக் கருதி வெட்டுவதால் மட்டும் தோஷம் நீங்கி விடுவதில்லை.

இதெல்லாம் மனதிருப்திக்காக செய்யப்படும் வெறும் சடங்கு மட்டுமே. “பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை’ என்பதை மனதில் கொள்ள வேண்டும். செவ்வாயால் உண்டாகும் எந்த தோஷமாக இருந்தாலும் அதற்கு முருகவழிபாடே மிகச்சிறந்தவழி. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள், “”முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் நாமம்’என்றுநமக்கு காட்டியவழிகாட்டியுள்ளனர் .

செவ்வாய் தோஷத்தால் அவதிப்படுபவர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் இன்னும் எளியபரிகாரமாக காலை, மாலை இருவேளையும் “துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். இதை எழுதிய தேவராய சுவாமிகள், “கவசம் படிப்போருக்கு நவகோள்(நவக்கிரகங்கள்) மகிழ்ந்து நன்மை அளித்திடும்’ என்று பாடலுக்குள்ளேயே குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் தலமான பழநிக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.

“”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”

என்னும் கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் நேரங்களில் 3 முறை சொல்ல வேண்டும். வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கதிகலங்கிடும் என்ற உண்மையை உணருங்கள்.

உங்களுக்கான நல்ல மதியையும் விதியையும் முருகப்பெருமானே வகுத்தருள்வான் என்று பூரணமாக நம்புங்கள். அவனருளால் எல்லாம் நன்மையாக நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுக்கியமான 20 வீட்டு பூஜை குறிப்புகள்!
Next articleவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!