தாய் நாட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது! சிரித்துக்கொண்டே கூறிய அபிநந்தன்!

0
856

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய அபிநந்தனுக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27-ம் திகதி பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அமைதியை நிலைநாட்டும் விதமாக அவரை மீண்டும் இந்திய ராணுவத்தினரிடம் பஞ்சாப் பகுதியில் உள்ள வாகா எல்லை அருகே ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.

அவரது வரவேற்பை எதிர்ப்பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் நேற்று முழுவதுமே பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர்.

அதன்படி நேற்று இரவு 9.20 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் உடனடியாக அவர் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பேசிய விமானப்படை துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர், விமானத்தில் இருந்து வெளியில் குதித்து தப்பியதால் அபிநந்தனுக்கு உடற்பரிசோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமிர்தசரஸ் துணை ஆணையர் சிவ் டூல்சி சிங் தில்லனிடம் அபிநந்தன் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், அபிநந்தன் சிரித்துக்கொண்டே தாய்நாடு திரும்பியதில் மகிழ்ச்சி என அவரிடம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் அபிநந்தனுக்கு சனிக்கிழமையன்று இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகள் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Previous articleஅபிநந்தனை பெருமைப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா! என்ன செய்தார் தெரியுமா!
Next articleஇன்று கும்ப ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்!