தாயிலந்தில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தையின் கண்ணுக்கு நேர்ந்த கொடுமை

0
1103

Smart Phone க்கு அடிமையாகிய பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.!

தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தை தனது கண் பார்வையை இழந்துள்ளது. குழந்தையின் பார்வை பறிபோனதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாடுதான் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையின் பார்வை பறிபோயுள்ளது:
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டிற்கு அடிமையாகிப் போன 4 வயதுக் குழந்தையின் பார்வை பறிபோயுள்ளது. உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்கள் கவனம்:
பிஞ்சு குழந்தைகளின் கவனத்தைத் திருப்பும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களின் பின்னால் உள்ள விபரீதம் பற்றிப் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் அஜாக்கிரதை:
பல பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், குழந்தைகளின் சேட்டைகளைக் குறைப்பதற்காகவும் அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஒன்றை பெற்றோர்கள் கொடுத்துவிடுகின்றனர்.

ஆபத்தை உணராத பெற்றோர்:
முக்கியமாய் பெற்றோர்கள் வேலை செய்யும் நேரங்களில் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் இருக்கப் பல பெற்றோர்கள், இந்த செயலின் ஆபத்தை உணராமல் செய்துவருகின்றனர்.

உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது:
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற மொபைல் சாதனங்களைக் குழந்தைகள் நேரடியாக அணுகுவதனால் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆபத்துடன் சேர்த்து உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபரீதத்தில் போய் முடிந்த கதை
தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் என்பவற்றின் 4 வயதுக் குழந்தைக்குத் தான், ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதனால் கண் பார்வை பறிபோயுள்ளது. தனது குழந்தைக்கு 2 வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்களை பயன்படுத்த அனுமதித்தது இன்று விபரீதத்தில் போய் முடிந்துள்ளதென்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

smart phone

கருவிழியில் அதிகப்படியான சேதாரம்:
இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் பயன்படுத்தியதனால் குழந்தையின் கண் பார்வை மோசம் அடைந்துள்ளது என்றும். குழந்தையின் கருவிழியில் அதிகப்படியான சேதாரம் ஏறப்பட்டுள்ளதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவிழியில் அறுவைசிகிச்சை:
குழந்தையின் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் பார்வை கோளாறை சரி செய்துள்ளனர்.

டைஸ்க்கினியாஸ்:
ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாதனங்களில் ஏற்படும் டைஸ்க்கினியாஸ் தான் முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டைஸ்க்கினியாஸ் என்பது மயோபியா, ஃபோர்சைடுட்னிஸ், அசிஸ்டிமடிசம், சிதைந்துபோகும் பிரதிபலிப்பு, சிதைந்த சிதைவு போன்ற பலவிதமான காரணங்களால் உருவாகுவதாகும்.

பெற்றோருக்கு அறிவுரை:
இரண்டு கண்களிலும் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பின் குழந்தையின் பார்வை 80 சதவீதம் குணப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு நேர்ந்த சோகம்:
தான் குழந்தைக்கு நேர்ந்த சோகம் போல் மற்ற குழந்தைக்கு நேரிட வேண்டாம் என்று குழந்தையின் தகப்பரான தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக பெற்றோர் அனைவரையும் எச்சரிக்கை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் ஆபாத்து விளைவிக்கும் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உலக பெற்றோர் அனைவரையும் எச்சரித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 22.03.2019 வெள்ளிக்கிழமை ! Today Rasi Palan!
Next articleஆண்களின் விறைப்பு தன்மையை குணப்படுத்தி விந்தணுவை அதிகரிக்கும் முன்னோர்களின் முறைகள்.