தென் மாகாண சபைக்கு உட்பட்ட அரச பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயற்பட வேண்டும் என தென்மாகாண ஆளுநர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நண்பகல் 12.30 மணியளவில் தென் மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதற்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.தென் மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படாது எனவும் கூறப்படுகின்றது.
அப்பாடசாலைகள் வழமை போன்று 1.30 மணிக்கு விடப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த அறிவித்தலினால் பல தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது, தென்மாகாண பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை சேவையிலுள்ள பஸ் சாரதிகள் ஆகியோர் இது குறித்து விசனம் தெரிவித்துள்ளனர்.