கனடாவின் டொரொன்டோ நகர் தமிழால் நனைந்துகொண்டிருப்பதாக, அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நகரில் பயணிக்கும் வாகனங்கள், கட்டிடங்கள், வீதி விளம்பரப் பலகைகள் என்று டொரொன்டோ நகர் எங்கும் தமிழ் மொழியிலான சுவரொட்டிகள் மக்களுடைய கவனத்தை ஈர்த்து வருகின்றன.
எதிர்வரும் ஜுன் மாதம் 29ம் திகதி டொரொன்டே அரங்கில் நடைபெற இருக்கும் ஐ.பி.சி. தமிழா Toronto 2019 பிரம்மாண்ட நிகழ்வின் விளம்பர பதாதைகள், சுவரொட்டிகள் ஆயிரக் கணக்கில் டொரொன்டோ முழுவதும் ஒட்டப்பட்டுவருகின்றன.
தமிழ் எழுத்துக்களினாலான அந்த சுவரொட்டிகள் வேற்று மொழிக்காரர்களை ஆச்சரியப்படுத்தி வருவதுடன், கனடா வாழ் தமிழ் மக்களை பெருமை அடையவைத்தும் வருகின்றன.








