சென்னை ஜே.ஜே நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ரங்கநாதன் என்ற மென்பொறியாளர் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் வழுக்கி கீழே விழுந்ததாக உடனிருந்த நண்பர் பாரதிராஜா என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால் உடற்கூறு ஆய்வில் அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிசார் நண்பர் பாரதிராஜாவினை விசாரிக்கையில், மென்பொறியாளர் ரங்கநாதனின் கொலைக்கான மர்மம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாரதிராஜாவின் அண்ணன் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில் தனது மனைவியுடன் வசித்துவருவதாகவும், விடுமுறை நாட்களில் தனது நண்பனை அழைத்துக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு பாரதிராஜா அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பொறியாளர் ரங்கநாதன் அண்ணன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார். பாரதிராஜாவும் அவரது அண்ணனும் கடைக்கு வேலைக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர் அவரது வீட்டிற்கு ரகசியமாக அடிக்கடி சென்று வந்துள்ளார்.
நண்பன் ரங்கநாதன் தனது அண்ணன் வீட்டிற்கு ரகசியமாக வந்து செல்லும் தகவல் பாரதிராஜாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் தனது நண்பனை எச்சரித்துள்ளார் பாரதிராஜா. ஆனால் தானாக செல்லவில்லை என்றும் உனது அண்ணி கூறியதால் தான் சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவ நடந்த நாளன்றும் பகல் நேரத்தில் பாரதிராஜாவின் அண்ணியை சந்திக்கச் சென்றுள்ளார் ரங்கநாதன். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா கடையில் இருந்து தான் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்த ரங்கநாதன் தலையில் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். ஒரே அடியில் சம்பவ இடத்தில் பலியான ரங்கநாதனை வலுக்கி விழுந்து இறந்துள்ளதாக கூறி தப்பித்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.
தன்னுடன் உறவாடி தன் அண்ணனின் திருமண வாழ்வைக் கெடுத்த நண்பனை ஒரே அடியில் தீர்த்துக் கட்டியதாக பாரதிராஜா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.




