Home thatstamil one india tamil oneindia tamil டீசரில் வெளியான தகவல்! 2.0 படத்தின் கதை இதுதானா!

டீசரில் வெளியான தகவல்! 2.0 படத்தின் கதை இதுதானா!

0
594

இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படம் 2.0. இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி அனைவரிடமும் செம பாராட்டை பெற்று வருகிறது.

டீசர் பார்க்கையில் பலரும் பல கதையை கூறி வருகின்றனர். இந்த கதையையும் படித்துப்பாருங்கள். பொருந்துகிறதா என்று.

அக்ஷய் குமார் அந்நியன் அம்பி போல நல்லவராக இருந்து மக்களுக்கு தீங்கான செல்போன் தொடர்பான ஏதோ ஒரு பிரச்சனைக்காக போராடுகிறார்.

இதனால் கோபமான தொழிலதிபர் ஐசரி கணேஷ் அவரை செல்போன் கோபுரத்திலேயே அடித்து தொங்கவிட செய்கிறார்.

அப்போது அங்கே சுற்றிவரும் பறவைகளாலும், செல்போன் கோபுரத்தில் ஏற்படும் ஏதோ ஒருவிதமான மாற்றத்தாலும் அக்ஷய் குமாருக்கு பறவை மற்றும் செல்போன் அலைவரிசையும் கலந்த ஒருவித சக்தி கிடைக்கிறது.

இதனால் இதற்கு காரணமானவர்களையும், செல்போன் பயன்படுத்தும் மக்களையும் அந்த செல்போனை வைத்தே எப்படி பழிவாங்குவார் என்று கூறப்படுகிறது.

இதை வசிகரனின் சிட்டி ரோபோ 2.0 எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதி கதையாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

செல்போன் கோபுரத்தில இருந்தா எப்படி பவர் வரும்னு யோசிக்கிறது புரியுது. ஸ்பைடர் கடிச்சா ஸ்பைடர்மேன் ஆகும்போது இது ஏன் சாத்தியம் இல்லைனு ஷங்கர் சொன்னாலும் சொல்லலாம்.

Previous articleவறுமையில் கஷ்டப்பட்ட கூலித்தொழிலாளிக்கு கிடைத்த கோடிப்பரிசு மழை! மகிழ்ச்சியில் குடும்பத்தார்!
Next articleமோட்டார்சைக்கிளில் மகனை ஏற்றிச் சென்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்பட்ட அசம்பாவிதம்!