டிக் டோக்கில் சாகசம்! கழுத்து எலும்பு முறிந்து வாழ்க்கையை இழந்த 19 வயது இளைஞர்!

0

டிக்டோக் வீடியோவில் பேக்பிலிப் முயற்சி செய்த இளைஞர் ஒருவருக்கு கழுத்து எலும்பு முறிந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டோக் வீடியோக்களினால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவின் துமகூரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் குமார். 19 வயதான இவர்டிக் டோக்கில் வீடியோ பதிவிட நண்பரின் உதவியை நாடியுள்ளார். அதாவது பேக்பிலிப் எனப்படும் பின்புறமாகக் குதித்தலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து அதை டிக் டோக்கில் பதிவிட திட்டமிட்டுள்ளார்.

அதற்கான முயற்சியில் இறங்கிய குமார், பின்புறமாகக் குதிக்கும் போது, கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறியுள்ளார். அப்போது அவர் தலையானது நேரடியாகத் தரையில் மோதியது. இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு உடைந்தது. இதையடுத்து குமாரை அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதுகுறித்து கூறியுள்ள மருத்துவர்கள், முதுகெலும்புதான் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய காரணி. அதனால் அவர் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் தனியாக இருந்த பெண்! மர்ம நபர்கள் செய்த கொடூரச் செயல்!
Next articleசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை! அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா!