ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!

0
600

இன்று ஏராளமான மக்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள ஜிம் செல்கிறார்கள். பொதுவாக உடற்பயிற்சி செய்யும் போது வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் இந்த தவறைத் தான் செய்கிறார்கள்.

உடற்பயிற்சியாளர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன் எதையேனும் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இங்கு அப்படி ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை ஜிம் செல்லும் முன் உட்கொள்ளுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான வலிமை கிடைப்பதோடு, தசைகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.

முட்டை வெள்ளைக் கரு
வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின் மற்றும் செலினியம் உள்ளது. இது உடற்பயிற்சியின் போது வேண்டிய ஆற்றலை வழங்கும்.

ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது. இது மெதுவாக ஆற்றலை வழங்கி, நீண்ட நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய உதவும்.

இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம், ஜிம்மில் உடற்பயிற்சியை எளிமையாக செய்ய உதவி புரியும். மேலும் இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும்.

அவகேடோ
அவகேடோ மில்க் ஷேக்கை உடற்பயிற்சி செய்யும் முன் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், செய்யும் உடற்பயிற்சியின் முழு நன்மையையும் பெறலாம்.

Previous articleதொப்புள் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான 10 உண்மைகள்!
Next articleவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு தெரியும்! ஆனா எப்படி குடிக்கிறது நல்லதுன்னு தெரியுமா!