ஜவ்வரிசி எந்த மரத்தில் காய்க்கும் தெரியுமா?

0
2950

பல சத்துகள் அடங்கிய ஜவ்வரிசி பல வகையான உணவு பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.

ஜவ்வரிசியில் உள்ள சத்துக்கள்

ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஒரு 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உட்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.

மருத்துவ பயன்கள்

அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து, அதைக் குழந்தைக்குக் கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.
ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜவ்வரிசி கிச்சடி

பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேர்க்கடலையை ஒன்றும் பாதியாக உடைத்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்).
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
அதன் பின் பெருங்காயத்தூள் இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும்.
பொன்னிறம் ஆனதும் பிசிறி வைத்துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறி நல்ல மணம் வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
மருத்துவ பயன்கள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு என்பதால் வெயில் காலங்களில் கிச்சடி செய்து சாப்பிடுங்கள்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பை தரும்.

Previous articleஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால்!
Next articlekeerai vagaigal – 59 கீரை வகைகள் பயன்கள்!