ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் நாமல்! திடீர் குத்துக்கரணம் போட்ட மகிந்த!

0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனது மகன் நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக உள்நாட்டு ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய மகிந்த ராஜபக்ச,

“நாமலுக்கு 35 வயது பூர்த்தியாகாததால், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று நான் இந்திய ஊடகங்களிடம் கூறியதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அது முற்றிலும் பொய். உங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்று இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனது சகோதரர்கள் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நான் பதிலளித்திருந்தேன். கட்டாயமாக எனது சகோதரர்களைக் களமிறக்குவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

எனினும், இந்த கருத்தை உள்ளூர் ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச தி ஹிந்துவுக்கு வழங்கியிருந்த செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“எனது மகன் ( நாமல் ராஜபக்ச) ஜனாதிபதி வேட்பாளராக முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச வயதெல்லை 35ஆக இருக்கின்றது. எனவே 2019இல் நாமலை கருத்தில் கொள்ள முடியாது.

எனது சகோதரர் நிச்சயம் ஒரு போட்டியாளராக இருப்பார். ஆனால், கட்சி மற்றும் கூட்டணி தான் யார் என்பதை முடிவு செய்யும்” என மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். எனினும், தற்போது மகிந்த ராஜபக்ச அதனை மறுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் வைத்து வெளிப்படுத்தப்பட்ட விடயம்! ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு?
Next articleசென்னையில் வீதியில் திரண்ட பொது மக்கள்! நிலவில் தெரிந்தது பாபாவின் முகமா?