சொத்தை விழுந்த பல்லை அடைக்க முட்டை ஓட்டை பயன்படுத்தும் முறை!

0

சொத்தை விழுந்த பல்லை அடைக்க முட்டை ஓட்டை பயன்படுத்தும் முறை.

மோசமான வாய் சுகாதாரத்தால் கிருமிகள் பற்களைத் தான் சொத்தையாக்குகின்றன. வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே முடிந்த அளவு சொத்தைப் பற்கள் வராமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது.

ஒருவேளை சொத்தைப் பற்கள் இருந்தால், அதைப் போக்க பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று முட்டை ஓடு. ஆம், முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்க முடியும். ஏனெனில் இதில் ஏராளமான அளவில் கால்சியம் மற்றும் 27 கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆய்வு
ஹங்கேரிய மருத்துவர், முட்டை ஓட்டின் ஆரோக்கியமான பண்புகள் குறித்து உயிரியலாளர் மற்றும் மருத்துவர்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தினார்.

10 ஆண்டு ஆய்வு
10 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், முட்டை ஓட்டில் எளிதில் உடல் உறிஞ்சும்படியான கால்சியம் ஏராளமான அளசில் இருப்பது கண்டறியப்பட்டது.

பிலிப்பைன்ஸ் ஆய்வு
பிலிப்பைன்ஸில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், மூட்டை ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் டூத்பேஸ்ட் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பற்காறைகள் உருவாகும் வாய்ப்பைக் குறைப்பதாகவும், வலிமையான எனாமலைக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சொத்தைப் பற்கள் போகும்
முட்டை ஓட்டில் உள்ள கால்சியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள், ஆரோக்கியமான எனாமலுக்கு தேவையானவை என்றும், சொத்தைப் பற்களைத் தடுக்கும் எனவும் ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்தது.

முட்டை ஓட்டில் உள்ள இதர கனிமச்சத்துக்கள்
முட்டை ஓட்டில் மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அலுமினியம், பாஸ்பரஸ், சல்பர், சிலிகான், சோடியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயாரிக்கும் முறை:
முட்டை ஓடுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முட்டை ஓடுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, முட்டை ஓடுகளை உலர்த்தி, நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
தினமும் இந்த முட்டை ஓடு பொடியை 1/2 டீஸ்பூன் உண்ணும் உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும்.

இதர நன்மைகள்
எலும்பு திசுக்கள் கால்சியத்தால் ஆனது. ஆகவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள், முட்டை ஓட்டின் பொடியை உணவில் சேர்த்து வந்தால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான கோளாறுகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கால்சியம் குறைபாடு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே வாரத்தில் உடலை சுத்தம் செய்ய இயற்கை பானம் தயாரிக்கும் முறை, அதன் மற்ற பலன்கள்!
Next articleஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!