கொரில்லா குரங்குக்கு மக்கள் உணவை வீசி எறிய அது தவறு என சைகை மொழியில் அந்த கொரில்லா குரங்கு கூறிய காட்சி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம் மியாமியில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் வீசி எறிந்த உணவை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தையே சைகையில் கூறுவதாக வனவிலங்கு பூங்காவின் பராமரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
வனவிலங்கு உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவு ஏதும் அளிக்கக்கூடாது என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு பொது விதி.
ஏன் என்றால் மக்கள் வீசி எரியும் உணவால் விலங்குகளுக்கு உடல் உபாதை ஏதும் நேரிடக்கூடாது என்பதுதான் இந்த விதியின் பின்னனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lowland gorilla at Miami zoo uses sign language to tell someone that he's not allowed to be fed by visitors.
— CCTV IDIOTS (@cctv_idiots) November 3, 2019
Via @GautamTrivedi_ pic.twitter.com/o9osNgsJhs