சென்னையில் வீதியில் திரண்ட பொது மக்கள்! நிலவில் தெரிந்தது பாபாவின் முகமா?

0

நிலவில் பாபா முகம் தெரிவதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளிலும் விதீயில் மக்கள் ஒன்று கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் பாபாவின் முகம் தெரிவதாக நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியிருந்தன.

அத்துடன், நிலவில் பாபாவின் முகம் தெரிவது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, சென்னையின் பல பகுதிகளிலும் பொது மக்கள் ஒன்று கூடியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு ஒன்று கூடிய மக்கள் மத்தியில் இருந்து பாபாவின் முகம் தெரிவதாக சிலர் கூறியதையடுத்து, அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

சுமார் இரண்டு மணி நேரம் மக்கள் வீதிகளில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தவிர்ந்து தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பொது மக்கள் ஒன்று கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிலவில் பாபாவின் முகம் தெரிந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் நம்பகரமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கும் நாமல்! திடீர் குத்துக்கரணம் போட்ட மகிந்த!
Next articleபிக்பாஸ் வீட்டிற்கு வந்த நித்யா ஐஸ்வர்யாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?