Home thatstamil one india tamil oneindia tamil சென்னையில் இருந்து வெளியூருக்கு தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண்! அங்கு நடந்த சம்பவம்!

சென்னையில் இருந்து வெளியூருக்கு தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண்! அங்கு நடந்த சம்பவம்!

0
478

தமிழகத்தில் ரயில் முன்னால் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தண்டவாளம் அருகே ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஸ்கூட்டர் யாருக்கு சொந்தமானது? என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த ஸ்கூட்டர் நீடாமங்கலம் அருகே உள்ள பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் ராகுல்பிரியன் (21) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இறந்து கிடப்பது அவர் தான் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அங்கு இறந்து கிடந்த பெண், காளாச்சேரி மாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் 2-வது மகள் வினிதா (20) என்பதும் தெரிய வந்தது.

பிணமாக கிடந்த வினிதாவின் கையில் ராகுல் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி பொலிசார் விசாரித்தபோது ராகுல்பிரியன், வினிதா ஆகிய இருவரும் காதல் ஜோடி என்பதும், இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வினிதாவின் அக்காவுக்கும், பழங்களத்தூரை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பழங்களத்தூருக்கு வினிதா சென்றபோது அந்த ஊரை சேர்ந்த ராகுல்பிரியனுடன் நட்பு ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வினிதா வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நீடாமங்கலம் வந்த வினிதாவை, ராகுல்பிரியன் ஸ்கூட்டரில் வையகளத்தூர் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் இருவரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வையகளத்தூர் ரெயில்வே கேட் கீப்பர் தெரிவித்த தகவலின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து காதல் ஜோடியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Previous articleபேட்டி கொடுக்க அரை குறை ஆடையுடன் வந்த ஸ்ருதிஹாசன்! ரசிகர்கள் கிண்டல்! இதை பாருங்கள்!
Next articleபதவி துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கூறியது என்ன!