சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

0

இலங்கையில் அண்மைக்காலமாக தொற்றா நோய்கள் பாரிய சவாலாக உருவெடுத்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் இவற்றை உடனடியாக கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்கவெண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆளுநர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய மகாநாட்டில் உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,

”நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாரதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் செல்வந்தர்களின் அரசாங்கம் என்று சிலர் கூறியபோதிலும் செல்வந்தர் அரசாங்கத்தின் வறிய மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள் அடிக்கடி பெற்றுக் கொடுக்கப்படுகிறது. மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையும் தற்போதைய அரசாங்கத்தினாலேயே. புரட்சிவாத அரசாங்கத்தினால் மருந்து விலை குறைக்கப்படவில்லை. தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்கள் மீட்கப்படவேண்டும். தற்பொழுது எமது நாட்டில் தொற்றாநோய்கள் பாரிய சவாலாக உள்ளது.” என்றார்.

இதேவேளை, தொற்றா நோய்களாக நீரிழிவு, மாரடைப்பு, இதய நிறுத்தம், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம் !
Next articleஇலங்கை தமிழர்களுடன் காதலில் விழுந்த முக்கிய பிரபலங்கள்! காதலே! காதலே!