பொன்மகள் வந்தாள் சீரியலின் நாயகியாக நடித்து வந்தவர் ஆயிஷா. அதுதான் அவரின் அறிமுக சீரியல், ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அதில் இருந்து வெளியேறியிருந்தார்.
பின் மாயா என்ற தொடரில் நடித்தார், இப்போது சத்யா என்ற தொடரில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த சீரியல் குறித்து அவர், பையன் மாதிரியா என்று கொஞ்சம் தயங்கினேன், பின் நடிக்கலாம் என்று முடிவு எடுத்தேன்.
சீரியலுக்காக பசங்க போடுற மாதிரியாக உடை எல்லாம் தேர்வு செய்தேன், நான் ஏற்கெனவே ஒல்லியாக தான் இருப்பேன். ஆனால் கதாபாத்திரத்திற்காக இன்னும் கொஞ்சம் ஒல்லியானேன். இந்த கதாபாத்திரம் என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் என்று கூறுகிறார்.





