சீப்பில் சீவினாலே முடி கொத்தாக கொட்டுதா? இதை மட்டும் செய்யுங்க!

0
789

இளவயதிலேயே அதிகளவு முடி கொட்டுவதால் வழுக்கை விழுகிறது, இதனால் மன ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள். முடி வளர என்ன க்ரீம் தேய்த்தும் பலன் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் இதற்கு தீர்வாக வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எண்ணெய் தயாரிக்கலாம்,

தேவையான பொருட்கள்

வெங்காயம்
கற்றாழை
தேன்
ஆலிவ் ஆயில்

செய்முறை

முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து கொண்டு, கடைசியாக கற்றாழை ஜெல்லை சேர்க்கவும்.

தலைக்கு குளிக்கும் முன் அரை மணிநேரத்திற்கு முன்பாக இதனை தடவி நன்கு மசாஜ் செய்யவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரவும்.

ஒரு தடவை தயார் செய்து வைத்த கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம், ஒருவாரம் வரை கெட்டுப் போகாது.

Previous articleஆரோக்கியம் தரும் அருகம் புல்!
Next article5 கோடி கொடுக்கலையா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சன்னிலியோனின் உதவி!