சிவப்பு முட்டைகோஸை சமைக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க..!

0
432

ஊதா முட்டைகோஸ் அல்லது சிவப்பு முட்டைகோஸ் என்பது உலகம் முழுவதும் அதன் ஊட்டச்சத்துக்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு காய் ஆகும்.

இதுவும் ப்ரோக்கோலி, காலே, காலிப்ளவர் குடும்பத்தை சார்ந்ததுதான். சாதாரண முட்டைகோஸை விட இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், குறைந்தளவு கலோரிகளும் இருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

செரிமானத்திற்கு சிறந்தது
ஊதா முட்டைக்கோஸில் கலோரிகளில் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

இதனால் செரிமான செயல்பாட்டில் இது திறம்பட செயல்படுகிறது. நன்கு சமைக்கப்பட்ட முட்டைகோஸை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமான செயல்பாட்டை மெதுவாக செய்வதன் மூலம் இது உங்களை நீண்ட நேரம் திருப்தியாக இருக்க உதவுகிறது. இது உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது
சிவப்பு முட்டைக்கோஸை தொடர்ச்சியாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கும். இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது இதயத்தில் இருக்கும் இரத்தத்தின் அளவை சீரமைக்கிறது. மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காய் உங்களின் இதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இந்த முட்டைகோஸில் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-ன் அளவை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது. அதனால்தான் நோயின்றி வாழ்வதற்கு மருத்துவர்கள் இந்த காயை பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றுவதன் மூலம் இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

பச்சையாகவே சாப்பிடலாம்
இதனை நீங்கள் சமைக்காமல் பச்சையாகவே சாலட் வடிவில் சாப்பிடலாம். இந்த சாலட்டை செய்ய உங்களுக்கு தேவை சில அடிப்படை பொருட்கள் மட்டுமே.

நறுக்கிய முட்டைகோஸ், ப்ரோக்கோலி, தக்காளி, அவகேடா போன்றவற்றை இதனுடன் சேர்த்து சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்து இதனை சாப்பிடலாம்.

இல்லயெனில் பச்சை முட்டைகோஸை சமைப்பதைப் போலவே இதனையும் நீங்கள் அனைத்து விதத்திலும் சமைத்து உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Previous articleமருத்துவர்களிடம் இந்த விடயத்தை மாத்திரம் மறைக்காதீங்க! மறைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Next articleஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள். எந்தெந்த ராசியினருக்கு இந்த மாதம் செழிப்பாக இருக்கும்..!