சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கட்டுதல் போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு இயற்கை முறை வைத்தியம் !

0

சிறுநீர் அடைப்பு, சிறுநீர் கட்டுதல் போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு இயற்கை முறை வைத்தியம் !

சிறுநீர் கட்டுதல் கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழையை 200 மி.லி எடுத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து தூளாக்கி இரண்டு சிட்டிகை எடுத்து இவையனைத்தையும் 100 மி.லி அளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலக்கி 1/4 மணி நேரம் மூடி வைத்திருந்து பின்பு அந்த நீரை மட்டும் வடித்து குடித்து வந்தால் சிறுநீர் கட்டு நீங்கும்.

சிறுபூளை வேரை எடுத்து நன்றாக சுத்தம் செய்து நன்கு பொடியாகி கஷாயம் செய்து இருவேளை குடித்து வந்தால் சிறுநீர் கட்டு குறைந்து நன்றாக சிறுநீர் பிரியும்.

பிண்ணாக்குக் கீரையுடன் சிறிதளவு சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீர்க்கட்டு குறையும்.

முருங்கை கீரை, கால் ஸ்பூன் சீரகம் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி குடித்து வந்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் எளிதாக பிரியும்.

சங்குப்பூவின் இலைகளை இளவறுப்பாக வறுத்து நன்றாக அரைத்து பொடி செய்து 250 மி.கி அளவு சாப்பிட்டு வெந்நீரை அருந்தி வர, சிறுநீர் கட்டு குறைந்து நன்றாக கழிச்சல் உண்டாகும்.

ஆதண்டை இலையை மோர் விட்டு நன்றாக அரைத்து ஊறவைத்து பத்து வேளைக்கு அரைக்கால்ப்படி சாறு குடித்து வந்தால் சிறுநீர் கட்டு முற்றிலுமாக குறையும்.

சிறுநீர் அடைப்பு ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்றாக கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி காலையும் மாலையும் 3 நாட்கள் குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, நீர் குத்தல் குறையும்.

சங்கிலை வேர் பட்டையை இடித்து சாறு எடுத்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 20 மி.லி எடுத்து வெள்ளாட்டு பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு குறையும்.

வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக நீங்கும்.

கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு குறையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதன் மகனின் படத்தை வெளியிட்ட வனிதா ! வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி இவ்வளவு பெரிய ஆம்பள ஆகிட்டானே !
Next articleசிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் !