சிறுவர் பூங்காவில் சில்மிஷ வேலையில் ஈடுபட்ட காதல் ஜோடி! பொலிஸார் செய்த செயல்!

0
431

தமிழகத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கும், முதியவர்கள் பொழுதுபோக்குக்காகவும், மேலும் குடும்பத்தோடு ஒன்றாக நேரத்தை செலவிடவும் உருவாக்கபட்டது தான் சிறுவர் பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்கள்.

ஆனால் தற்போது அவை காதலர்கள் சந்திப்பு இடமாக மாறியுள்ளது. இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் நிரம்பி காணப்படுகின்றனர்.

இதனால் குழந்தைகள் எந்த இடையூறும் இல்லாமல் ஓடி விளையாத முடிவதில்லை. மேலும் காதல் ஜோடிகள் செய்யும் சில்மிஷ வேலைகளினால் பூங்காவிற்கு வருவோர் முகம் சுளிக்கும்படி உள்ளது.

இதனால் விடுமுறை நாட்களில் கூட குழந்தைகளை பூங்கா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பயம் கொள்கின்றனர். இவ்வாறு காதல் ஜோடிகளின் சில்மிச வேலைகளுக்கு முடிவு கட்டும் வகையில் போலீஸ் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர்களின் அட்டூழியம் தாங்க முடியாத பொதுமக்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அதனைதொடர்ந்து அங்கு சில்மிஷ வேலைகளில் ஈடுபட்ட காதல் ஜோடிகளை காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவளின் பெற்றோர்களை வரவைத்து பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் புத்தி கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இதுபோன்று காதலர்கள் செய்யும் தவறான செய்கையினால் பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகளின் மீது உள்ள நம்பிக்கை இழக்கப்படுகிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றது.

Previous articleயாழ்ப்பாணத்தை சென்றடைந்தது உத்தர தேவி!
Next article62 ஆண்டுகளின்பின் பதியப்படும் உண்மை!சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றியவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்!