சிறுநீரை தங்கமாக மாற்றும் ஜோதி மரம்! விந்தையான மரத்தை பற்றி கூறும் சித்தர்கள்!

0

மரங்களில் தான் எத்தனை வகை கனிகளை கிளைகளில் தந்தால் சுவை சற்று குறையும். அதே கனிகளை வேர்களில் பழுத்து மண்ணுக்குள் புதைத்து கொடுத்தால் எவ்வளவு சுவை கூடும் என்று நமக்கு காட்டும் வேர்பலா தான் பழுத்து உதிர்த்த கனிகளையே தானே மீண்டும் எடுத்து கிளைகளில் ஒட்டிக் கொள்ளும், ஏரழிஞ்சல் மனிதர்கள் அருகில் வந்துவிட்டால் திருடன் வருகிறான் ஜாக்கிரதை என்று எச்சரிப்பது போல மனித வாசனை பட்டாலே எருமை போல சத்தம் எழுப்பும். கன எருமை விருட்சம், இப்படி வகை வகையாக சொல்லலாம். இந்த வரிசையில் மிகவும் விந்தையான மரத்தை பற்றி சித்தர்கள் சொல்கிறார்கள் அதன் பெயர் ஜோதி மரம்.

போக முனிவரின் மலைவாகடம் என்ற பழமையான நூலை படிக்கும் வாய்ப்பு இந்த மரத்தின் பட்டையை எடுத்து வந்து குழித்தைலம் எடுத்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தியவுடன் மயக்கம் வருமாம். மயங்கி விழுந்தவரை வாழைப்பழமும், நெய்யும் கலந்து பிசைந்து ஊட்டி விட்டு நீட்டி படுக்க வைத்துவிட வேண்டுமாம். கால் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து வைத்து இறந்தவர்களுக்கு கட்டுவது போல் கட்ட வேண்டுமாம்.

அவர்கள் ஏழு நாட்கள் மயக்கத்தில் இருப்பார்களாம். பின் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், சுத்தமான பசும்பாலில் பனைவெல்லம் கலந்து கொடுக்க வேண்டுமாம். அதன் பிறகு பாசிப்பயிறு சாம்பாரும், பச்சரிசி சாதமும் சாப்பிட வேண்டுமாம். அதன்பிறகு சகஜ நிலைக்கு வந்துவிடும் அந்த மனிதன் தனது இயற்கை உபாதையை எதில் கழித்தாலும், அவைகளில் எது பட்டாலும் தங்கமாக மாறிவிடுமாம் இப்படி போகர் கூறுகிறார். போகர் மட்டுமல்ல சுந்தரானந்தர் குறுநூல் என்ற புத்தகமும் இதையே சொல்கிறது. இந்த ஜோதி மரம் அடி பெருத்தும், இலைகள் வட்டமாகவும் மலர்கள் ஊமத்தம் பூ வடிவிலும் இருக்குமாம். மரத்தை கொத்தினால் கள்ளிச்செடியில் வடிவது போல் பால் வடியுமாம். சந்திரன் வராத அமாவாசை பொழுதில் மின்மினி பூச்சிகள் ஒட்டி உள்ளது போல வெளிச்சமாக தெரியுமாம். இத்தகைய மரம் கொல்லிமலை, சதுரகிரிமலை,பொதிகைமலை போன்ற இடங்களில் முன்பு இருந்ததாம். இப்போது யாரும் அதை பார்த்ததாக தகவல் இல்லை.

ஆனால் நான் இருட்டிலும் வெளிச்சமாக தெரியும் ஜோதி புல்லை பார்த்திருக்கிறேன் இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். நான்கு விரல் உயரம் வரையிலும் இது வளரக்கூடியது. இரவிலே இதைப்பார்த்தால் தீப்பற்றி எரிவது போல இருக்கும். இந்த புல்லை செந்தூரம் செய்து நெல்மணி அளவு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தியானம், யோகம் இவைகள் கைகூடும் என்று பெரியவர்கள் சொன்னதனால் மிகவும் சிரமப்பட்டு அதை கண்டடைந்தேன். இப்போது ஜோதிப்புல் எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. ஆனாலும் அதை நான் பார்த்திருக்கிறேன் பலனை அடைந்திருக்கிறேன் எனும் போது நமது சித்தர்கள் ஒருநாளும் இல்லாதததை பேசவில்லை இருப்பதை தான் பேசினார்கள். நாம் தான் இருப்பதை இல்லாது செய்துவிட்டு வறியவர்களாக நிற்கிறோம்.

இன்று நம்மிடையே வாழுகின்ற பல மரங்களில் இப்படி எத்தனையோ சக்திகள் மறைந்து கிடக்கலாம். அவைகள் நமக்கு தெரியவில்லை என்பதனால் மரங்களை அழித்து அதன் சக்திகளை கெடுத்துவிடக்கூடாது. அதனால் மரங்களை நேசிக்கும் பண்பை நமது சுயநலத்தை முன்னிறுத்தியாவது வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்களுமா இப்படி! படுக் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை பிந்துமாதவி!
Next article3 லட்சம் பேர் அவதானித்த காட்சி! போங்கம்மா நீங்களும் உங்க விளையாட்டும்!