சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகின்றதனால், மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு காணப்படுவதனால் ஒரு நாளைக்கு சிறுநீர் கழிக்கும் தடவைகள் 6 முதல் 7 முறை அல்லது 4 முதல் 10 முறை என நபருக்கு நபர் மாறுபடலாம்.
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து ஒரு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பார்;க்கம் போது, எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்பது உறுதி செய்யப்படுவதுடன், அது மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் பித்த நோய் உள்ளது என்பது உறுதி செய்யப்படும். மேலும், சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக உள்ளது என்பது உறுதி செய்யப்படும்.
மேலும், எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் உங்களுக்குள்ள நோய் விரைவில் குணமடைய கூடிய நோயாகவும், எண்ணெய்த்துளி அப்படியே எந்தவித மாறுபாடும் இன்றி காணப்பட்டால் உங்களுக்குள்ள நோய் குணமடைய கால தாமதமாகும் என்பதனையும், எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ உங்களுக்குள்ள நோயை குணப்படுத்த முடியாது என்பதும் வெளிப்படை உண்மைகளாகும்.
மேலும், உடல் வறட்சி, டயட், சிறுநீரக பாதை சுருக்கம், குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள், தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்றனவற்றினால் குறைந்தளவான சிறுநீர் உற்பத்தி இடம்பெறுகின்றது.
By: Tamilpiththan