சிறுநீரக சேதத்தை விளைவிக்கும் சில உணவுப் பழக்கங்கள்.
நம் உடலில் உள்ள சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து படிக்க படிக்க நீங்கள் வியக்கும் அளவில் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். சிறுநீரகங்களில் உள்ள செல்கள், ஒரு சிறு வடிப்பான்களாக செயல்படுகிறது. இந்த வடிப்பான்கள் தான் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி, சிறுநீருக்கு அனுப்புகிறது. சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு 200 குவாட்ஸ்-க்கும் அதிகமான அளவில் இரத்தத்தை வடிகட்டுகிறது. அதில் 2 குவாட்ஸ் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் அத்தியாவசிய சத்துக்களை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவ்வளவு முக்கிய பணியை செய்யும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். நாம் வாழும் வாழ்க்கை முறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் தொடர்ச்சியாக ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், அது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதோடு, அழுக்குகளை தேங்கச் செய்து, சிறுநீரகங்களின் அமைப்பையே பாழாக்கிவிடும்.
இதன் விளைவாக சிறுநீரக நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். எனவே நீங்கள் நீண்ட வருடங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், முதலில் உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்துங்கள். குறிப்பாக தற்போது நாம் உட்கொள்ளும் பல உணவுப் பொருட்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கக்கூடியவை. அந்த உணவுப் பொருட்கள் எவையென்று ஒவ்வொரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இப்போது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
இறைச்சி
விலங்கு புரோட்டீன் அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும். ஒருவேளை சிறுநீரக பிரச்சனைகள் இருந்து, புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருளை உட்கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகம். புரோட்டீன் வளர்சிதை மாற்றம் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதில் சிரமத்தை உண்டாக்கும். அதோடு புரோட்டீன் வளர்சிதை மாற்றமானது உடலில் அமில அளவை அதிகரித்துவிடும். மேலும் புரோட்டீன் அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தாவர மற்றும் விலங்கு வகை புரோட்டீன்களை சரியான அளவில் எடுக்க வேண்டும். மேலும் கேள்வி எழுந்தால், இதுக்குறித்து உங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசுங்கள்.
மது
அளவாக, எப்போதாவது மரு அருந்தால், தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்காது. ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது சிறுநீரகங்களைப் பாதிப்பதோடு, சிறுநீரக நோய்களின் நிலைமையை மோசமாக்கும். ஏனெனில் ஆல்கஹாலானது சிறுநீரகங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, இரத்தத்தை சரியாக வடிகட்ட முடியாமல் செய்துவிடும். மேலும் ஆல்கஹால் உடலில் வறட்சியை உண்டாக்கி, சிறுநீரகங்களில் உள்ள செல்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும். எனவே மது அருந்தும் பழக்கம் இருந்தால், உடனே அதைக் கைவிடுங்கள்.
உப்பு
உடலில் நீர்ச்சத்தின் அளவைப் பராமரிப்பதற்கு சோடியம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சோடியம் அளவுக்கு அதிகமானால், அது பாதிப்பை உண்டாக்கும். எப்போது ஒருவர் அதிகளவ உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ, அப்போது இதய செயல்பாட்டை ஒழுங்காக கட்டுப்படுத்த இரத்த ஓட்டத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுக்களை நீக்க சிறுநீரகங்கள் ரை தேக்கி வைக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக சிறுநீரகங்களில் அழுத்தம் ஏற்படும்.
அதிகளவு உப்பு சிறுநீரில் வெளியேற்றப்பட்ட புரோட்டீனின் அளவை அதிகரித்து, சிறுநீரக செயல்பாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதோடு அதிகப்படியான உப்பு இதயம் மற்றும் தமனிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உணவில் அதிக உப்பு சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.
காப்ஃபைன்
காபி மற்றும் டீயில் உள்ள காப்ஃபைன், சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்கும். காப்ஃபைன் இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, சிறுநீரகங்களில் அழுத்தத்தையும் அதிகரிக்கும். ஒருவர் காபி அல்லது டீயை அதிகளவில் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்கும். அதிலும் ஒருவர் வெறும் வயிற்றில் காப்ஃபைன் பானங்களைக் குடித்தால், அது சிறுநீரக கல்லை உருவாக்கும். மேலும் காப்ஃபைன் சிறுநீர்ப்பெருக்கு பண்பைக் கொண்டது. எனவே இந்த பானங்களை அதிகம் குடிக்கும் போது, உடல் வறட்சி ஏற்பட்டு, சிறுநீரக கல் அபாயமும் அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான பானங்களை அதிகம் குடிக்காதீர்கள்.
செயற்கை சுவையூட்டிகள்
ஆரோக்கியத்திற்காக சர்க்கரையைத் தவிர்த்து, செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்துகிறீர்களா? இந்த செயற்கை சுவையூட்டிகளும் சர்க்கரையைப் போன்று ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவைகளே. முக்கியமாக செயற்கை சுவையூட்டிகள் சிறுநீரக செயல்பாட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட ஆசைப்பட்டால், செயற்கை சுவையூட்டிகளுக்கு பதிலாக தேன், பனை வெல்லம் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
பால் பொருட்கள்
பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், அது வெளியேற்றப்பட்ட சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக சிறுநீரக கற்களின் அபாயம் அதிகரிக்கும். பால் பொருட்களில் புரோட்டீன் வளமான அளவில் இருக்கலாம். ஆனால் சிறுநீரக நோய்கள் இருக்கும் போது, உட்கொள்ளும் புரோட்டீன் அளவைக் கவனித்து சமநிலையில் சரியான அளவில் எடுக்க வேண்டும்.
சிறுநீரக நோய்கள் இருக்கும் போது, சிறுநீரகங்களால் உடலில் பயன்படுத்தப்படாத அதிகப்படியான பாஸ்பரஸை வெளியேற்ற முடியாமல் இருக்கும். இந்நிலையில் இரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு அதிகரித்து, எலும்புகள் கால்சியத்தை இழக்க ஆரம்பிப்பதோடு, சரும பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருக்கும் போது, பால் பொருட்களில் உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் அதிகரித்துவிடும். இதனால் இதயம் மற்றும் தசை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், எப்போதும் பால் பொருட்களை அளவாகவே உட்கொள்ளுங்கள்.
கார்போனேட்டட் பானங்கள்
கார்போனேட்டட் பானங்களான சோடா மற்றும் எனர்ஜி பானங்களும், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக நோய்களை உண்டாக்கும். இதற்கு இதில் உள்ள அதிகளவிலான சர்க்கரை அல்லது செயற்கை சுவையூட்டிகள், காப்ஃபைன், பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகள் தான். ஒருவர் இந்த பானத்தை அதிகளவில் குடித்தால், உடல் பருமன் அதிகரிப்பதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்துடன், சிறுநீரக நோயின் அபாயமும் அதிகரிக்கும். எனவே தாகம் எடுத்தால், தண்ணீர், இளநீர் அல்லது எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இவை தாக்கத்தை உடனே அடக்கும்.
புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பதால், நுரையீரல் மற்றும் இதயம் மட்டுமின்றி, சிறுநீரகங்களும் தான் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும். இதற்கு சிகரெட்டில் உள்ள புகையிலை தான் காரணம். ஒருவர் சிகரெட்டை அதிகம் பயன்படுத்தினால், அதனால் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவஸ்தைப்படக்கூடும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், அதனால் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றாலும் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே இப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள்
மரபணு மாற்றப்பட்ட எந்த ஒரு உணவுகளும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல. இந்த உணவுகள் சிறுநீரகங்களில் ஆக்ஸலேட்டுகளின் அளவை அதிகரித்து, சிறுநீரக கற்களை உருவாக்கி, சிறுநீரகங்களை பெரிதும் பாதிக்கும். தற்போது பெரும்பாலான உணவுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுகளாகத் தான் உள்ளது. இதனால் சிறுநீரக பிரச்சனைகள் மட்டுமின்றி, கல்லீரல் பிரச்சனைகளாலும் தான் அவஸ்தைப்படக்கூடும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, ஆக்ஸலேட் அதிகம் நிறைந்த உணவுகளான ருபார்ப், ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பசலைக்கீரை, ஸ்குவாஷ், பீட்ரூட், டீ, காபி, நட்ஸ், டோஃபு போன்றவற்றையும் அதிகம் சாப்பிடாதீர்கள். முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை வாங்கி சாப்பிடுங்கள்.
நீர்மங்கள்
சிறுநீரகங்களின் முக்கிய செயல்பாட்டில் ஒன்று, உடலில் நீர்ச்சத்தின் அளவைப் பராமரிப்பது. சிறுநீரக நோய் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாது. இதன் விளைவாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு, நாளடைவில் இதய நோயாலும் பாதிக்கப்படக்கூடும். ஆகவே சிறுநீரக நோய் உள்ளவர்கள், தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்தால் போதும். ஒருவேளை டயாலிசிஸ் செய்பவர்கள், குறைவான அளவில் நீரைக் குடித்தால் போதும்.
சிறுநீரக நோய் இருக்கும் போது ஒருவர் அளவுக்கு அதிகமாக நீரைக் குடித்தால், அதனால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும். எனவே இச்செயலைத் தவிர்க்க வேண்டும். மேலும் எவ்வளவு நீர் குடிப்பது என உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து, அந்த அளவு மட்டும் குடியுங்கள்