சினிமா பிரபலம் ரோபோ சங்கர் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! சினி குடும்பத்தினர் சோகம்.
விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் காமெடி கலைஞராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நடிகராகவும் செயல்பட்டு வருகிறார் ரோபோ சங்கர்.
தற்போது அவரின் மனைவி பிரியங்கா மற்றும் மகள் என குடும்பமே டிவி, சினிமா என வந்துவிட்டனர். மகள் இந்துஜா விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பிரியங்காவின் அம்மா லலிதா அவர்கள் காலமாகிவிட்டார். இதனால் ரோபோ சங்கர் குடும்பம் கவலையில் ஆழ்ந்துள்ளது. கொரோனா காரணமாக யாரும் போகஇயலாத நிலையில் சினி குடும்பத்தினர் தமது இரங்கல் செய்தியினை வலைத்தளங்களுடாக தெரிவித்து வருகின்றனர்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: