சிசிடிவி கேமராவில் சிக்கிய நிஜ ஏலியன்! இது நிஜம் தானா! குழப்பத்தில் பார்வையாளர்கள்!

0

அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்ற பெண் சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதுவரை அந்த வீடியோவை 11 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இது மட்டுமின்றி பல ஆயிரம் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ்களும் குவிந்து வருகிறது.

அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் எனப் பலரும் யோசிக்கலாம். ஏலியன் போன்ற ஓர் உருவம் தன் வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தென்பட்ட சிசிடிவி காட்சிகளைத்தான் கோம்ஸ் தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

ஏலியன்கள் என்ற ஒன்று உண்மையில் உள்ளதா இல்லையா என்ற குழப்பம் ஆய்வாளர்களுக்கே இன்னும் உள்ளது. அதிலும் அவை பூமியிலும் நடமாடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றன. இந்த நிலையில், இப்படி ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ஒல்லியான மற்றும் வித்தியாசமான ஓர் உருவம் கேமராவின் பின் பகுதியில் இருந்து நடந்து சென்று சிறிது தூரத்தில் நடனமாடிக்கொண்டே செல்கிறது. இந்தக் காட்சிகள்தான் வீடியோவில் உள்ளன.

இதனுடன், “ஞாயிற்றுக்கிழமை காலை நான் கண்விழிக்கும்போது என் வீட்டின் கதவு அருகில் ஒரு நிழலைப் பார்த்தேன். அது என்ன என கேமராவில் செக் செய்யும்போது இந்த உருவம் தெரிந்தது. ஆனால், அது என்ன என என்னால் சரியாகக் கூறமுடியவில்லை. அருகில் உள்ள வேறு யாராவது இதை உங்கள் கேமராவில் பார்த்தீர்களா? “ என கோம்ஸ் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பல நேர்மறையான கருத்துகளும் நகைச்சுவையான கருத்துகளும் பகிரப்பட்டு வருகிறது. சிலர் இது ஹாரிபாட்டர் படத்தில் வரும் டாபி கதாபாத்திரம்போல் இருப்பதாகவும், சிலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ போன்று உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைத் தேடி கொயம்பத்தூரில் சுற்றி வளைப்பு!
Next articleமீண்டும் ஆபாச நடனத்தை ஆண் நண்பருடன் ஆடிய ஷாலு! வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்!